» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லஞ்சமில்லா அரசை நடத்தும் ஜோசப் விஜய் அரசுக்கு நன்றி: தூத்துக்குடி காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்!

ஞாயிறு 5, ஜூலை 2026 1:54:27 PM (IST)

congresschair.jpg

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டுத் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரமாண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாநகர மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.எம். சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சுப்ரமணிய ஆதித்தன் கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் சமூகத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன: : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூரை நியமனம் செய்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு இக்கூட்டத்தின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

காமராஜர் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடும் வகையிலும், மத்திய அரசின் மாணவர்களுக்கு எதிரான கல்விக்கொள்கைகளை எதிர்த்தும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும் தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்று, லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத நல்லாட்சியை நடத்தி வரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கும், அவரது தலைமையிலான தமிழக அரசுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்தில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஜோனத்தான், ரோஷன், கௌசிக், பிரதீப், கௌதம், ஹரிஷ், ஆகாஷ் உட்படப் பல இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் ஐசன் சில்வா, தெற்கு மண்டலப் பொறுப்பாளர் நிர்மல் கிறிஸ்டோபர், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சாமுவேல் ஞானதுரை, ஊடகப் பிரிவு தென்மண்டலப் பொறுப்பாளர் ஜான் சாமுவேல், துணை அமைப்பின் பொறுப்பாளர்கள் பிரபாகரன், பாலகிருஷ்ணன், ஜெயஜோதி, சேவியரம்மாள், சிமியோன், சிவராஜ் மோகன், முத்துவிஜயா, மகிளா காங்கிரஸ் நாடாளுமன்றப் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி புளோரினா, பொதுச்செயலாளர்கள் மைக்கேல் பிரபாகர், கோபால், ரஞ்சிதம் ஜெபராஜ், நாகேந்திரன், துணைப் பொறுப்பாளர்கள் டேவிட் வசந்தகுமார், ராஜாராம், மடத்தூர் தனபால்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் இக்னேஷியஸ், மரிய செல்வராஜ், காமாட்சி தனபால் உள்பட பலர்  கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory