» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் சாலையோர முள் செடிகள் அகற்றும் பணி!

ஞாயிறு 5, ஜூலை 2026 11:28:44 AM (IST)

Mulsedi4i.jpg

தூத்துக்குடியில், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்த சாலையோர முள்செடிகள் மற்றும் கருவேல மரங்களை, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தினர் அப்புறப்படுத்தினர்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு பிரதான சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில், சாலையின் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் மற்றும் முள் செடிகள் அடர்த்தியாக, அதிக அளவில் வளர்ந்து நின்றன. இந்த முள் செடிகள் சாலையை ஆக்கிரமித்து நீண்டு இருந்ததால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தினசரி பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்ததோடு, விபத்துகளும் ஏற்படும் அபாயம் நிலவி வந்தது.

இதனைத் தொடர்ந்து, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி R.முருகன் தலைமையில் சக்தி பீட துணைத் தலைவர் திருஞானம், ஜெயராமன், கோபால், மாணிக்கம் உட்பட செவ்வாடை தொண்டர்கள் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த அனைத்து முள் செடிகளையும், கருவேல மரக் கிளைகளையும் அப்புறப்படுத்தினர்.

நீண்ட நாட்களாக அச்சுறுத்தலாக இருந்த முள் செடிகளை அகற்றிய செவ்வாடைத் தொண்டர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory