» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வடமாநில வாலிபர் மர்ம மரணம் : போலீஸார் விசாரணை
ஞாயிறு 5, ஜூலை 2026 2:19:33 PM (IST)
தூத்துக்குடி புதிய துறைமுகப் பகுதியில் தங்கி வேலை செய்து வந்த உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தங்கியிருந்த அறையிலேயே உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுகி என்பவரின் மகன் மகேஷ் குமார் (35). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை தேடித் தூத்துக்குடிக்கு வந்துள்ளார். தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் செயல்பட்டு தனியார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் கட்டிடக் கூலித் தொழிலாளியாகப் பணிக்குச் சேர்ந்து, புதிய துறைமுக பழைய காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
மகேஷ் குமாருக்கு அதிகளவில் மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை அவர் வழக்கம்போல் வேலைக்குச் செல்லாமல், தான் தங்கியிருந்த அறையிலேயே தனியாக இருந்துள்ளார். மாலை நேரத்தில் வேலை முடிந்து அருகில் தங்கியிருந்த சக தொழிலாளர்கள் அறைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது, மகேஷ் குமார் அறையின் தரையில் கீழே விழுந்து மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த மகேஷ் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என தெர்மல்நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு வங்கியில் துணிகரக் கொள்ளை முயற்சி : லாக்கரை உடைக்க முடியாதால் நகை தப்பியது
ஞாயிறு 5, ஜூலை 2026 2:28:21 PM (IST)

தூத்துக்குடி ஆலயத்தில் நிதிமுறைகேடு புகார் : சபை மக்கள் ஆர்ப்பாட்டம்- பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 2:03:21 PM (IST)

மீன்பிடி வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு: பெரியகுளத்தில் பரபரப்பு!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:59:24 PM (IST)

லஞ்சமில்லா அரசை நடத்தும் ஜோசப் விஜய் அரசுக்கு நன்றி: தூத்துக்குடி காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 1:54:27 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:35:30 AM (IST)

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் சாலையோர முள் செடிகள் அகற்றும் பணி!
ஞாயிறு 5, ஜூலை 2026 11:28:44 AM (IST)








