» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 232 மது பாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன!
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் லெவிஞ்சிபுரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குச் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட பாத்திமா நகரைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் என்ற வில்லிங்டன் (36) மற்றும் மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த மரிய சூசை ராஜ் (36) ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 232 மது பாட்டில்கள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!
திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)

வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 22, ஜூன் 2026 5:50:00 PM (IST)

கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!
திங்கள் 22, ஜூன் 2026 4:17:41 PM (IST)

சொத்து தகராறில் மூதாட்டி மீது பொய் வழக்கு? ஆட்சித்தலைவரிடம் கருணை மனு!
திங்கள் 22, ஜூன் 2026 4:08:03 PM (IST)








