» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொத்து தகராறில் மூதாட்டி மீது பொய் வழக்கு? ஆட்சித்தலைவரிடம் கருணை மனு!

திங்கள் 22, ஜூன் 2026 4:08:03 PM (IST)



கப்பிகுளத்தில் சொத்து தகராறில் தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று 80 வயது மூதாட்டி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். 

கப்பிகுளத்தில் சரஸ்வதி என்ற 80 வயது மூதாட்டி, தனியாக வசித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் சேகர் என்பவர், சொத்துத் தகராறு காரணமாகத் தனது வீட்டிற்குள் புகுந்து, இடத்திற்குரிய கணினி பட்டாவை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், இதனைத் தடுத்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சேகர் தன்னைத் தாக்கியதாகவும், அதில் மயக்கமடைந்த தனது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் அவர் எடுத்துச் சென்றுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது அவசர உதவி எண்களான 100, 181 ஆகியவற்றிற்குத் தகவல் அளித்தும் உடனடி நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனப் புகார் தெரிவித்துள்ள அவர், பின்னர் ஊர் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு ஒட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்து சுமார் 7 நாட்கள் சிகிச்சை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைத் தாக்கிய சேகர் என்பவர், தனது கையை அவரே அறுத்துக் கொண்டு பசுவந்தனை காவல் நிலையத்தில் தன் மீது எதிர் புகார் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் தன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் சரஸ்வதி தெரிவித்துள்ளார். வயது மூப்பு காரணமாகச் சரியாக நடக்கக் கூட முடியாத நிலையில் உள்ள தன் மீது பதியப்பட்ட இந்த வழக்கைப் பொய் வழக்கு எனக்கூறி ரத்து செய்ய வேண்டும் என்றும், தாக்குதல் நடத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory