» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 22, ஜூன் 2026 5:50:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன் மாற்றுத்திறனாளிகளை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கனிவுடன் கேட்டறிந்து 18 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், மூத்த குடிமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்யேக இடத்திற்குச் சென்று அவரிடமிருந்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வரும் பத்ம இலக்கியா என்ற மாணவிக்கு இரண்டாம் ஆண்டு கல்வித் தவணைக் கட்டணமாக 1,00,000 ரூபாய் நிதியுதவியை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
இந்நிகழ்வில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ரமணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!
திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)

வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)

கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!
திங்கள் 22, ஜூன் 2026 4:17:41 PM (IST)

சொத்து தகராறில் மூதாட்டி மீது பொய் வழக்கு? ஆட்சித்தலைவரிடம் கருணை மனு!
திங்கள் 22, ஜூன் 2026 4:08:03 PM (IST)








