» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காயல்பட்டினத்தில் 14 ஆண்டுகளாக நிறைவேறாத குடிநீர் திட்டம்: சிறப்புக் குழு அமைக்க கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 3:51:14 PM (IST)

காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த 14 ஆண்டுகளாக நிறைவடையாமல் உள்ள இரண்டாம் குடிநீர் திட்டம் குறித்து கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்று மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு இறுதியிலான காலகட்டத்தில், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்திற்கான டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆகியும் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவு பெறவில்லை.
இத்திட்டத்தில் மேல ஆத்தூர் பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்குப் பதிலாக, பொன்னங்குறிச்சியில் இருந்து குடிநீர் கொண்டு வரும் அம்சம் மட்டுமே தற்போது நிறைவுற்றுள்ளது. நகருக்குள் இத்திட்டத்தின் கீழ் புதிய குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை.
புதிய உள்கட்டமைப்புகள் பயன்பாட்டில் இல்லாததால், பல ஆண்டுகளுக்கு முந்தைய பழைய விநியோகக் குழாய்கள் மூலமே இன்னும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, நகருக்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு விநியோகிக்கப்படும் தண்ணீரும் அசுத்தமான நிலையிலேயே உள்ளது. மேலும், ஒவ்வொரு வீட்டிற்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணியும் இதுவரை நிறைவு பெறாமல் முடங்கியுள்ளது.
எனவே, பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய குழாய்களைப் பயன்படுத்தாமல் பழைய முறையிலேயே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதற்கான காரணங்களை நகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இத்தனை ஆண்டுகளாக நிறைவடையாமல் இருக்கும் இத்திட்டம் குறித்து விசாரணை நடத்த ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, அதன் கண்காணிப்பில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மெகா அமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!
திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)

வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 22, ஜூன் 2026 5:50:00 PM (IST)

கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!
திங்கள் 22, ஜூன் 2026 4:17:41 PM (IST)








