» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!
திங்கள் 22, ஜூன் 2026 4:17:41 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் டாப்செட்கோ மூலம் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் வழங்கப்படும் பல்வேறு கடன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்கள் டாப்செட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு:
பொதுவான தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 5,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடனுக்கு வயது வரம்பு 18 முதல் 60 வயது வரை ஆகும்.
வழங்கப்படும் கடன் திட்டங்களின் விபரங்கள்:
தனிநபர் கடன்: சிறு வர்த்தகம், விவசாயம், கைவினை மற்றும் மரபுவழித் தொழில்கள் செய்ய அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இதற்கான ஆண்டு வட்டி 1.25 லட்சம் ரூபாய் வரை 7 சதவீதமாகவும், அதற்கு மேல் 25 லட்சம் ரூபாய் வரை 8 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடனை 3 முதல் 6 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
குழுக்கடன் (சுய உதவிக் குழுக்கள்): மகளிர் திட்டம் மூலம் தரம் பிரிக்கப்பட்டு, 6 மாதங்கள் பூர்த்தியான சுய உதவிக் குழுக்களின் ஒரு உறுப்பினருக்கு அதிகபட்சமாக 1.25 லட்சம் ரூபாயும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாயும் 7 சதவீத ஆண்டு வட்டியில் கடன் வழங்கப்படும். திருப்பிச் செலுத்தும் காலம் இரண்டரை முதல் 3 ஆண்டுகள் ஆகும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
கறவை மாடு வளர்ப்புக் கடன்: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சமாக 1,20,000 ரூபாய் (ஒரு மாட்டிற்கு 60,000 ரூபாய் வீதம்) கடன் பெறலாம். இதற்கான ஆண்டு வட்டி 7 சதவீதம், திருப்பிச் செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
வெளிநாட்டு உயர்கல்விக் கடன் விபரங்கள்:
மருத்துவம், பொறியியல், முதுகலை மற்றும் பிஎச்டி போன்ற படிப்புகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அதிகபட்சமாக 25,000,000 ரூபாய்க்கு உட்பட்ட பாடத்திட்டச் செலவில் 85 சதவீதத் தொகை கடனாக வழங்கப்படும். மீதமுள்ள 15 சதவீதத் தொகையைத் தமிழ்நாடு அரசு வழங்கும்.
தகுதிகள்: வயது வரம்பு 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதி வாய்ந்த நுழைவுத் தேர்வுகளில் (SAT, GMAT, GRE) தேர்ச்சி பெற்றுச் சேர்க்கைக் கடிதம் பெற்றிருக்க வேண்டும் (மொழித்திறன் தேர்வு மட்டும் அடிப்படையானது அல்ல).
வட்டி மற்றும் கால அவகாசம்: இதற்கான ஆண்டு வட்டி விகிதம் 8 சதவீதம் ஆகும். படிப்பு முடியும் வரையிலான 5 ஆண்டுகள் தடைக்காலமாக (Moratorium) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடைக்காலம் உட்பட மொத்தம் 10 ஆண்டுகளுக்குள் இக்கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டும். முன்கூட்டியே கடனைச் செலுத்தினால் எவ்வித முன் கட்டணமும் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவங்களை டாப்செட்கோ இணையதளத்தில் (https://tabcedco.net ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், [Aadhaar Redacted] மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களை இணைத்துச் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!
திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)

வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 22, ஜூன் 2026 5:50:00 PM (IST)

கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

சொத்து தகராறில் மூதாட்டி மீது பொய் வழக்கு? ஆட்சித்தலைவரிடம் கருணை மனு!
திங்கள் 22, ஜூன் 2026 4:08:03 PM (IST)








