» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில்வே கீழ்நிலை பாலத்தை மேல்நிலைப் பாலமாக மாற்ற வண்டும்: கிராம மக்கள் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 3:42:17 PM (IST)

ரயில்வே கீழ்நிலை பாலத்தில் ஆண்டுக்குச் சுமார் 8 மாதங்கள் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேல்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என்று கோடாங்கால் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டம் கடம்பூர் பேரூராட்சியில் கோடாங்கால் என்ற சங்கரப்பேரி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காகச் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் அங்குப் பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை அப்புறப்படுத்திவிட்டு, கோடாங்கால் குளத்திற்கு அருகில் ஒரு கீழ்நிலை பாலம் அமைத்தது.
வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காலங்களில் அருகில் உள்ள குளம் நிரம்பும்போது, குளத்து நீர் கசிந்து இந்த ரயில்வே கீழ்நிலை பாலத்திற்குள் புகுந்து விடுகிறது. நீரேற்றும் மோட்டார்கள் மூலமாகப் பாலத்திற்குள் இருக்கும் நீரை வெளியேற்றினாலும், குளத்து நீர் தொடர்ந்து கசிவதால் பாலம் எப்போதும் தண்ணீராலேயே நிரம்பிக் காணப்படுகிறது.
இக்கிராமத்தை வெளி ஊர்களுடன் இணைக்க இந்த ஒரு பாலம் மட்டுமே பிரதான பாதையாக உள்ளது. இதில் ஆண்டுக்குச் சுமார் எட்டு மாத காலம் தொடர்ந்து நீர் தேங்கி நிற்பதால், கிராமத்து விவசாயிகள், பள்ளி குழந்தைகள், அவசரச் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உட்படப் பொதுமக்கள் அனைவரும் வெளி ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, மக்கள் தற்காலிகமாகப் பயன்படுத்தப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகத் தற்போதைய கீழ்நிலை பாலத்தை மேல்நிலைப் பாலமாக மாற்றித் தந்து போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் சார்பாகத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது, 232 மது பாட்டில்கள் பறிமுதல்!
திங்கள் 22, ஜூன் 2026 8:08:20 PM (IST)

பள்ளி, மதரஸா மாணவர்களுக்குப் பாராட்டு விழா!
திங்கள் 22, ஜூன் 2026 8:03:48 PM (IST)

வாலிபரை வெட்டிய நண்பருக்கு போலீசார் வலைவீச்சு!
திங்கள் 22, ஜூன் 2026 8:00:44 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 585 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன!
திங்கள் 22, ஜூன் 2026 5:50:00 PM (IST)

கீழூர் ரயில் நிலையம் அருகே சாலை, பாதாள சாக்கடை மூடி சேதம் - சீரமைக்கக் கோரிக்கை!
திங்கள் 22, ஜூன் 2026 5:44:27 PM (IST)

அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை தொழில் மற்றும் கல்விக்கடன்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்!
திங்கள் 22, ஜூன் 2026 4:17:41 PM (IST)








