» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர் சங்கம்: புதிய நிர்வாகிகள் தேர்வு!

திங்கள் 22, ஜூன் 2026 3:32:40 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் நலச்சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அனைத்துக் கடலோரக் கிராமங்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் புன்னைக்காயலில் உள்ள புனித வளனார் திருமண்டபத்தில் ஊர் நல நிர்வாகக் கமிட்டித் தலைவர் கிறிஸ்டன் பர்னாந்து தலைமையில் துறைமுகக் கமிட்டித் தலைவர் தோமஸ் கொர்ரைறா முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்துக் கடலோரக் கிராமங்களின் ஊர் நிர்வாகக் கமிட்டி மற்றும் துறைமுகக் கமிட்டி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒவ்வொரு கடலோரக் கிராமத்திலிருந்தும் தலா இரண்டு பிரதிநிதிகள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பரிந்துரையின் பேரில் உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இச்சங்கத்தின் கௌரவத் தலைவராக தஸ்நேவிஸ் (சிங்கித்துறை), தலைவராக வினோஜின் (மணப்பாடு), செயலாளராக அமலிசன் பீரிஸ் (புன்னைக்காயல்), பொருளாளராக ஆசைதம்பி (ஆலந்தலை) மற்றும் ஒருங்கிணைப்பாளராக தாமஸ் @ ஆழிபுத்திரன் (புன்னைக்காயல்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் துணைத் தலைவர்களாகக் குளோரியான் (அமலிபுரம்), அமலன் பச்சேக் (சிப்பிகுளம்), துணைச் செயலாளர்களாகப் பீட்டர் (கொம்புத்துறை), சந்தியா (கீழவைப்பாறு), இணைச் செயலாளராகக் குமார் (திரேஸ்புரம்) மற்றும் இணைப் பொருளாளராக ராஜன் (வீரபாண்டியன்பட்டணம்) ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். சங்கத்தின் ஆலோசகர்களாக மெரின் (கல்லாமொழி), இஞ்ஞாசி (ஜீவா நகர்), ரவிஸ்டன் (பழையகாயல்), அசோக் டென்வர் (வேம்பாறு) மற்றும் பிரவின் (தருவைகுளம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory