» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ராகுல் காந்தி பிறந்தநாள்: தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 9:49:29 PM (IST)

இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுத் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாகப் பழைய பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் விழிப்புணர்வுடன் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவிற்கு, மாவட்டத் தலைவர் சகாயராஜ் தலைமை தாங்கினார். மாநகரின் முக்கியப் பகுதியான பழைய பேருந்து நிலையம் முன்பாகத் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள், ராகுல் காந்தியின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் தொடர் பட்டாசுகளை வெடித்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்குப் இனிப்புகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் ஐசன் சில்வா, நிர்மல் கிறிஸ்டோபர், துணை அமைப்புத் தலைவர்கள், மீனவர் காங்கிரஸ் துறை சிமியோன், மகிளா காங்கிரஸ் தலைவி பிரீத்தி வினோத், வழக்கறிஞர் பிரிவு பர்ணபாஸ், எஸ்சி துறை பிரபாகரன், மாநிலப் பேச்சாளர் பார்த்திபன் மற்றும் தென்மண்டல ஊடகப்பிரிவுத் தலைவர் ஜான் சாமுவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், மாவட்டப் பொதுச் செயலாளர் கோபால், மாவட்டச் செயலாளர்கள் இக்னேசியஸ், ரஞ்சிதம் ஜெபராஜ், சேவியரம்மாள், மாவட்டத் துணைத் தலைவர் ராஜாராம் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரென்னிஸ், ராபின் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் அசன் பாத்திமா, இசக்கியம்மாள், வார்டு தலைவர்கள் காமராஜ், மகாலிங்கம், முருகேசன், கிருஷ்ணன், ரூஸ்வெல்ட், தனிஸ்ளாஸ் மற்றும் நிர்வாகிகள் ஜெயபாண்டியன், சகாயராஜ் உட்பட மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகள், சார்பு அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மீட் அன்ட் ஈட் புதிய கிளை: எஸ்பி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 19, ஜூன் 2026 9:51:52 PM (IST)

ஜூன் 21-ல் நீட் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2,015 மாணவர்கள் எழுதுகின்றனர்!
வெள்ளி 19, ஜூன் 2026 8:40:29 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 8:32:08 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் தேசிய வாசிப்பு தினம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்!
வெள்ளி 19, ஜூன் 2026 5:43:21 PM (IST)

போதையில் கார் ஓட்டி விபத்து: தூத்துக்குடி மாநகராட்சி சஸ்பெண்ட் அதிகாரி அதிரடி கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 5:02:07 PM (IST)









