» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதையில் கார் ஓட்டி விபத்து: தூத்துக்குடி மாநகராட்சி சஸ்பெண்ட் அதிகாரி அதிரடி கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 5:02:07 PM (IST)
மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய வழக்கில், தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் உதவி ஆணையர் சரவணகுமாரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் அடுத்த மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (52). இவர் த.மு.மு.க.வின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தவர். கடந்த ஜூன் 10-ஆம் தேதி இரவு நேரத்தில், ஹக்கீம் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று, எதிர்பாராத விதமாக ஹக்கீமின் டூ-வீலர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஹக்கீம் படுகாயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர் கடுமையான மதுபோதையில் இருந்தது அங்கிருந்தவர்களுக்குத் தெரியவந்தது.இதுகுறித்து விபத்து நடந்த மங்கலம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த சரவணகுமார் (49) என்பது தெரியவந்தது. இவர் தூத்துக்குடி மாநகராட்சி உதவி ஆணையராகப் பணியாற்றி, பல்வேறு முறைகேடு புகார்களின் காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்புதான் தமிழக அரசால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியானது.
மேலும் இவர், இதற்கு முன்பு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய காலகட்டத்தில், 'பயோ மைனிங்' குப்பை கிடங்கு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்து, அரசுக்கு சுமார் 9.57 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சரவணகுமாரை மங்கலம் போலீசார் கைது செய்தனர். எனினும், கைது செய்யப்பட்ட சரவணகுமாருக்குத் தற்போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குப் பலத்த போலீஸ் காவலுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் தேசிய வாசிப்பு தினம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்!
வெள்ளி 19, ஜூன் 2026 5:43:21 PM (IST)

கோவில்பட்டியில் தொடரும் சாலை விபத்துக்கள் : பல்வேறு அமைப்புகள் திரண்டு போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:57:45 PM (IST)

தூத்துக்குடி ஐடிஐ-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
வெள்ளி 19, ஜூன் 2026 4:22:18 PM (IST)

தூத்துக்குடியில் பள்ளி நேரத்தில் வாகனத் தணிக்கை : போலீசாரின் செயலால் பெற்றோர், மாணவர்கள் அவதி!
வெள்ளி 19, ஜூன் 2026 3:51:56 PM (IST)

சமையல் சிலிண்டர், பைக்குகளுக்கு மாலை அணிவித்து தூத்துக்குடியில் சிபிஎம் நூதன போராட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 3:17:02 PM (IST)









