» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் தேசிய வாசிப்பு தினம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்!

வெள்ளி 19, ஜூன் 2026 5:43:21 PM (IST)



கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேசிய வாசிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் அனைவரும் நூலகப் புத்தகங்களை எடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஆர்வத்துடன் மேற்கொண்டனர்.

கல்வியையும் வாசிப்புப் பழக்கத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல அரும்பாடுபட்ட கேரள மாநிலத்தின் நூலகத் தந்தை என அழைக்கப்படும் பி.என்.பணிக்கரின் நினைவு தினமான ஜூன் 19-ஆம் தேதி, தேசிய வாசிப்பு தினமாகக் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவும், நூலகங்களின் பயன்பாடு மற்றும் புத்தகங்களின் அவசியத்தை உணர்த்தவும், கல்வி மற்றும் எழுத்தறிவை மேம்படுத்தவும் இந்த நாள் சிறப்பிக்கப்படுகிறது. 

இதன் தொடர்ச்சியாக ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை தேசிய வாசிப்பு வாரமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவர் முத்து முருகன் தலைமை தாங்கினார். 

ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் முத்து செல்வம், பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை மீனா அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, பள்ளியில் உள்ள மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களது பள்ளி நூலகத்திற்குச் சென்று, அங்குத் தங்களுக்குப் பிடித்தமான கதை, கவிதை மற்றும் பொது அறிவுப் புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பொன்மலர்பாரதி, பிருந்தாதேவி, பொற்செல்வி உட்படப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக, ஆசிரியர் பாலாஜி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory