» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!

வெள்ளி 19, ஜூன் 2026 8:32:08 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்களைப் போலீசார் இன்று தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

தூத்துக்குடி கே.வி.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் சங்கர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் மதன்குமார் (32) ஆகிய இருவர் மீது சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இவர்களின் தொடர் சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இவர்களைத் தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சிப்காட் காவல் நிலைய போலீசார் இன்று சங்கர் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் முறைப்படி கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory