» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மேலூர் 4-ஆம் இரயில்வே கேட் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை!
புதன் 17, ஜூன் 2026 7:44:57 PM (IST)

தூத்துக்குடி மேலூர் இரயில்வே நிறுத்தம் 4-ஆம் கேட் முற்பகுதி மற்றும் புதிய பேருந்து நிலைய இணைப்புச் சாலைகள் முற்றிலும் சிதிலமடைந்து, பள்ளம் பள்ளமாகக் காணப்படுவதால் ஏற்படும் விபத்து அபாயங்களைத் தடுத்து, சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சுதாகர் விடுத்துள்ள கோரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மேலூர் ரயில்வே நிறுத்தம் 4-ஆம் கேட் முன்பகுதி, புதிய பேருந்து நிலையம், முத்தம்மாள் காலனி மற்றும் மீளவிட்டான் ரோடு சந்திப்புப் பகுதி ஆகிய இடங்களில் சாலைகள் முற்றிலும் பழுதடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்குப் பெரும் பள்ளங்களாகக் காட்சியளிக்கின்றன.
மாநகரத்தின் மிக முக்கியப் போக்குவரத்துப் பாதையான இவ்வழியாகத்தான் தினசரி அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், சிற்றுந்துகளும் வெளியூர்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளும், கனரக சரக்கு வாகனங்களும் தொடர்ச்சியாகச் சென்று வருகின்றன.
தற்போதுள்ள மிக மோசமான சாலைச் சூழலில், மேலூர் 4-ஆம் ரயில்வே கேட் மூடப்படும் நேரங்களில், சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. சாலைப் பள்ளங்களால் வாகனங்களைச் சமநிலைப்படுத்த முடியாமல் ஓட்டுநர்கள் திணறுவதால், இங்கு எந்த நேரத்திலும் பெரும் விபத்துக்கள் ஏற்படும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.
குறிப்பாக, இப்பாதையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், தங்களுக்குப் பின்னால் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு வழிவிட நேரிடும் போது, தப்ப வழியின்றிச் சிதிலமடைந்த சாலையின் ஆழமான பள்ளங்களில் விழுந்து விடுகின்றனர். இது வாகன ஓட்டிகளுக்குப் பெரும் உடல் காயம் மற்றும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
எனவே, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரச் சாலைப் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, மேலூர் 4-ஆம் கேட் மற்றும் முத்தம்மாள் காலனி சந்திப்புப் பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளைத் தார்ச்சாலைகளாக விரைந்து சீரமைத்துத் தர வேண்டும் என இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் சுதாகர் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மக்கள்Jun 18, 2026 - 08:46:14 AM | Posted IP 162.1*****
ரயில்வே 🚃 ஸ்டேஷன் நுழைவாயிலில் ஏற்படும் நெரிசலை குறைக்க ரயில்வேக்கு சொந்தமான சிவன்கோயில் பாலகிருஷ்ணா தியேட்டர் ரோட்டில் ரயில்வேக்கு சொந்தஇடத்தில் உள்ள சுவற்றை இடித்து அதில் நுழைவு வாயிலை அமைத்து அகலமான இரு வழி சாலையாக அமைக்க வேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மீட் அன்ட் ஈட் புதிய கிளை: எஸ்பி சண்முகநாதன் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 19, ஜூன் 2026 9:51:52 PM (IST)

ராகுல் காந்தி பிறந்தநாள்: தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
வெள்ளி 19, ஜூன் 2026 9:49:29 PM (IST)

ஜூன் 21-ல் நீட் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2,015 மாணவர்கள் எழுதுகின்றனர்!
வெள்ளி 19, ஜூன் 2026 8:40:29 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது!
வெள்ளி 19, ஜூன் 2026 8:32:08 PM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலைய வளாகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கத் தடை: நிர்வாகம் எச்சரிக்கை!
வெள்ளி 19, ஜூன் 2026 5:53:18 PM (IST)

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் தேசிய வாசிப்பு தினம்: மாணவ, மாணவிகள் ஆர்வம்!
வெள்ளி 19, ஜூன் 2026 5:43:21 PM (IST)










ஏரியா காரன்Jun 19, 2026 - 06:31:28 PM | Posted IP 104.2*****