» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பஸ் நிறுத்தத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திங்கள் 15, ஜூன் 2026 10:40:23 AM (IST)

தூத்துக்குடியில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரைப் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

தூத்துக்குடி இன்னாச்சியார்புரம் பேருந்து நிறுத்தத்தில் பள்ளிச் சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் பேருந்திற்காகக் காத்து நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், அச்சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை மற்றும் பேருந்திற்காகக் காத்திருந்த சக பயணிகள் அந்த நபரைப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் போலீசார், அந்த நபரை மீட்டுத் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தூத்துக்குடி பூபால்ராயர் புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பாலசுப்பிரமணியன் (40) என்பதும், கூலித் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் பாலசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிறுத்தத்தில் பள்ளிச் சிறுமியிடம் வாலிபர் அத்துமீறிய இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory