» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் நிலைதடுமாறி விபத்து: வாலிபர் உயிரிழப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 3:21:25 PM (IST)
தூத்துக்குடி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில், படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை வி.எம்.சத்திரம், கவிதா நகரைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் சுடலை (32). இவர் கடந்த ஜூன் 10ஆம் தேதி தனது பிளாட்டினா இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரி அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி சாலையில் தானாகவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சுடலை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 11.40 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சாவு : தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:47:24 AM (IST)

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)

ஆட்டோ மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:45:35 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டு சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 10:34:03 AM (IST)

மாதாந்திர பராமரிப்பு பணி: சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி உட்பட பல பகுதிகளில் நாளை மின்தடை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:19:53 AM (IST)









