» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தரிசனம்!

வெள்ளி 15, மே 2026 5:12:04 PM (IST)



முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, இன்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.

கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பரிவார தெய்வங்களை பயபக்தியுடன் வணங்கினார்.

அரசியல் சென்டிமென்ட்:

திருச்செந்தூர் கோவிலுக்குப் பின்னால் தற்போது ஒரு சுவாரசியமான அரசியல் 'சென்டிமென்ட்' பரவலாகப் பேசப்படுகிறது. நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ததும், தற்போது அவர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. "இங்கு வந்து வேண்டினால் நினைத்தது நடக்கும்" என்ற நம்பிக்கை விஐபிக்களிடையே அதிகரித்துள்ளதால், அண்டை மாநில அரசியல் தலைவர்களும் இக்கோவிலை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இங்குச் சிறப்புப் பூஜைகள் செய்த பிறகு விஐபிக்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்!

தற்போது கோடை விடுமுறை மற்றும் கத்திரி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில், விஐபிக்களின் வருகைக்காகப் பொதுமக்களின் தரிசனம் அவ்வப்போது நிறுத்தப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதும் சாமானிய பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெயிலின் தாக்கத்தால் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, முக்கியப் பிரமுகர்களுக்கு அளிக்கப்படும் அதீத முன்னுரிமையைக் குறைத்து, சாமானிய மக்கள் எளிதாகச் சுவாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory