» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : முதல்வர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராட்டு!

வெள்ளி 15, மே 2026 4:06:30 PM (IST)

தமிழகத்தில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அரசாணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகர குழு வரவேற்றுள்ளது. இது தொடர்பாக உறுப்பினர் எம். கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் "தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எங்களது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் தற்போதையச் சூழலில், இது குடும்ப நலன் சார்ந்த மிக முக்கியமான நடவடிக்கையாகும்.

இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி முடிவை அனைவரும் வரவேற்கின்றனர். மது அரக்கனிடமிருந்து தமிழகத்தைக் காக்க, எதிர்காலத்திலும் இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory