» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு : இளைஞர் கைது - நகை பறிமுதல்!
வெள்ளி 15, மே 2026 4:32:12 PM (IST)

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்த சம்பவத்தில் வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி (27.04.2026), ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனலட்சுமி அணிந்திருந்த 6 பவுன் தாலிச் செயினைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குற்றவாளியைப் பிடிக்கத் துணைக் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், எஸ்ஐ ஸ்டீபன் மற்றும் இருப்புப் பாதை உட்கோட்ட குற்றப்பிரிவு எஸ்எஸ்ஐ அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய ஒரு இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கடம்பூர் கீழப்பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அழகுபாண்டி என்பது தெரியவந்தது. அவர்தான் தனலட்சுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட 6 பவுன் தங்கச் சங்கிலியைப் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட அழகுபாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தரிசனம்!
வெள்ளி 15, மே 2026 5:12:04 PM (IST)

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : முதல்வர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாராட்டு!
வெள்ளி 15, மே 2026 4:06:30 PM (IST)

கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா தொடக்கம்: 10ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு!
வெள்ளி 15, மே 2026 3:54:53 PM (IST)

மாணவர்களின் கோடை முகாம் திட்டத்திற்கு என்டிபிஎல் சார்பில் ரூ. 4 லட்சம் நிதியுதவி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 15, மே 2026 3:07:46 PM (IST)

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)










