» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் புகையிலை பொருட்கள் பதுக்கல்: ஒருவர் கைது - கார் பறிமுதல்!
வியாழன் 14, மே 2026 3:18:04 PM (IST)
சூரங்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சூரங்குடி காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் நேற்று நெடுங்குளம் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் கார் அருகில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருத்தவேல் (33) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் கருத்தவேலை கைது செய்து அவரிடமிருந்த 36 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ரொக்கப் பணம் ரூபாய் 41,800/- மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்களின் கோடை முகாம் திட்டத்திற்கு என்டிபிஎல் சார்பில் ரூ. 4 லட்சம் நிதியுதவி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 15, மே 2026 3:07:46 PM (IST)

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)










