» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி திருமணி ஆலயத்தில் சித்திரை திருவிழா
வியாழன் 14, மே 2026 3:06:07 PM (IST)

தூத்துக்குடி திருமணி ஆலயத்தில் 20-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெற்றது
தூத்துக்குடி மடத்தூர் சாலை, தபால் தந்தி காலனி 5-வது தெருவில் அமைந்துள்ள திருமணி ஆலயத்தில், 20-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு துளசி பெருமான், வருணியம்மன், ஆத்தி சுவாமி, ஆஞ்சநேயர் மற்றும் தசாவதார மூர்த்திகள் சன்னதிகளில் இந்த விழா நடைபெற்றது.
இதுகுறித்து தொல்லியல் ஆர்வலரும், ஆலய பூசாரியுமான பெ. ராஜேஷ் செல்வரதி அளித்துள்ள வரலாற்றுத் தகவல்கள் வருமாறு: இவ்வாலயம் தென்பாண்டி மன்னர்களால் ஆளப்பட்ட ஐந்து நிலப்பரப்புகளான கழுகுமலை, எப்போதும் வென்றான், உடன்குடி, மேலப்புதுக்குடி மற்றும் நான்குநேரி ஆகிய பகுதிகளில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமான உடன்குடி - செட்டியாபத்து "அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி" வழிபாட்டு முறையைச் சார்ந்தது.
'ஐந்து வீடு' என்பது பஞ்ச பாண்டவர்கள் ஐவரையோ, மேற்கூறிய ஐந்து நிலப்பரப்புகளையோ அல்லது வாசுதேவன், பலராமன், பிரதியும்னன், சம்பா, அனிருத்தன் ஆகிய ஐவரை உள்ளடக்கிய 'விருஷிணி' வழிபாட்டையோ குறிக்கும் அடையாளமாக இருக்கலாம் என்று தனது வரலாற்று ஆய்வின் அடிப்படையில் அவர் தெரிவித்தார். ஆலயத்தின் சித்திரை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பூசாரி பெ. ராஜேஷ் செல்வரதி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்களின் கோடை முகாம் திட்டத்திற்கு என்டிபிஎல் சார்பில் ரூ. 4 லட்சம் நிதியுதவி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 15, மே 2026 3:07:46 PM (IST)

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)










