» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓடும் காரில் தீப்பிடித்த சம்பவம்:. 4 பேர் உயிர் தப்பினர்!
வியாழன் 14, மே 2026 11:34:46 AM (IST)

எட்டையாபுரம் அருகே ஓடும் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ உ சி நகரில் வசிப்பவர் கணேசன் இவரதுமகன் பாலாஜி (32). இவர் தனக்கு சொந்தமான காரில் தனது நண்பர்கள் 3பேருடன் மதுரை பாண்டி கோயிலுக்கு சென்று விட்டு பின்பு மதுரையிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலை ரோட்டில் கார் எட்டயபுரம் அருகே உள்ளகுமாரகிரி கிராமம் அடுத்துள்ள ஒரு பள்ளியை தாண்டியவுடன் கார் இன்ஜினில் இருந்து புகை வந்தது. உடனடியாக காரை நிறுத்தி பார்த்தபோது கார் மள, மளவென தீப்பிடித்து எறிந்தது. இதனையடுத்து உடனடியாக அனைவரும் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினார்கள்.
பின்னர் எட்டையாபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரில் தீயை போராடி அணைத்தனர். இருந்தாலும் கார் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது. வாகனத்தில் இருந்த நபர்கள் யாருக்கும் காயம் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்களின் கோடை முகாம் திட்டத்திற்கு என்டிபிஎல் சார்பில் ரூ. 4 லட்சம் நிதியுதவி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 15, மே 2026 3:07:46 PM (IST)

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)










