» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ 50 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்!

வியாழன் 14, மே 2026 11:07:53 AM (IST)

திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ 50 லட்சம் மதிப்பிலான பிடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து வேணுடன் டிரைவரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம்   திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட சூர்யா டிம்பர் டிப்போ பின்புறம் உள்ள கடற்கரை  பகுதியில் இருந்து படகுமூலம்  இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தபடுவதாக க்யூபிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சி ராஜா ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சூர்யா  டிம்பர் டிப்போவில் இருந்து கடற்கரை  செல்லும் வழியில் இன்று அதிகாலை 1.25 மணி அளவில்  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் நரசன் விலையைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவரது மகன் மேக்கிங் செல்வம் (28) என்பவர்  பொலிரோ மேக்ஸ் பிக்கப் என்ற லோடு வாகனத்தில்  இலங்கைக்கு  படகுமூலம் கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட  சுமார் 35 கிலோ எடை கொண்ட 38 மூடை பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் வாகனத்தை ஓட்டி வந்த மேக்கிங் செல்வம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைப்பற்ற பட்ட பீடி இலைகள்  சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு சுமார் 50 இலட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory