» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீனவர் கத்தியால் குத்திக் கொலை : நண்பர் படுகாயம்
வியாழன் 14, மே 2026 10:57:20 AM (IST)
தூத்துக்குடியில் மீனவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். இது குறித்து 4பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பூ பாண்டியாபுரத்தில் வசிப்பவர் ஸ்டோன். இவரின் மகன் ஸ்னோவின் (26) மீனவர். தூத்துக்குடி திரேஸ்புரம் பூபால் ராயபுரத்தில் வசிப்பவர் ரவி இவரது மகன் சூசை (28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று இரவு கடலுக்கு சென்று விட்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே அமர்ந்து மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் 2வது தெருவை சேர்ந்த மலைராஜ் மகன் சந்தனராஜ் என்ற பாண்டி (20). மேட்டுப்பட்டி சங்குகுளி காலனியை சேர்ந்த இசக்கி முத்து மகன் முத்துக்குமார் என்ற கருப்பு (20) உள்பட 4 பேர்கள் அங்கு வந்து ஸ்னோவின் மற்றும் அவருடைய நண்பர்களுடன் அமர்ந்து மதுபானம் குடித்தார்களாம்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சந்தன ராஜ் என்ற பாண்டி மற்றும் முத்துக்குமார் என்ற கருப்பு உள்பட நான்கு பேரும் சேர்ந்து ஸ்னோவினை சரமாரியாக கத்தியால் குத்தினார்களாம். இதை தடுத்த அவரது நண்பர் சூசை என்பவருக்கும் தலையில் கத்திக்குத்து விழுந்தது பின்னர் அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
கத்திக்குத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஸ்னோவின் பரிதாபமாக இறந்தார்.
சூசைக்கு தொடர்ந்துசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காசி பாண்டியன் சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 3 கொலை சம்பவங்கள் நடந்து உள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்களின் கோடை முகாம் திட்டத்திற்கு என்டிபிஎல் சார்பில் ரூ. 4 லட்சம் நிதியுதவி: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 15, மே 2026 3:07:46 PM (IST)

பந்தை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு : விடுமுறைக்கு வந்த இடத்தில் சோகம்!
வெள்ளி 15, மே 2026 12:28:40 PM (IST)

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயர்வு: பாஜக மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா விளக்கம்!
வெள்ளி 15, மே 2026 12:18:04 PM (IST)

காதல் திருமணம் செய்த இளைஞர் தற்கொலை!
வெள்ளி 15, மே 2026 12:10:25 PM (IST)

தூத்துக்குடி பூ மார்க்கெட் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை!
வெள்ளி 15, மே 2026 10:47:59 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் படுகொலை: 4 பேர் கைது!
வெள்ளி 15, மே 2026 10:42:13 AM (IST)










