» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பை மாநில ஆக்கி போட்டிகள் தொடக்கம்: முதல் போட்டியில் தூத்துக்குடி வெற்றி
ஞாயிறு 10, மே 2026 9:32:04 AM (IST)

ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில், வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவில்பட்டியில் நேற்று தொடங்கின.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், முன்னாள் இந்திய ஆக்கி வீரரும், ஒலிம்பியனுமான திருமால்வளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 35 மாவட்ட அணிகள் இப்போட்டியில் களமிறங்கியுள்ளன.
தூத்துக்குடி வெற்றி: முதல் போட்டியில் திண்டுக்கல் மாவட்ட அணியை எதிர்கொண்ட தூத்துக்குடி அணி, 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற லீக் ஆட்டங்களில் திருநெல்வேலி, திருவள்ளூர், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
இப்போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, புவனேசுவரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சீனியர் ஆக்கி போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். போட்டிகளின் இயக்குநராக அணில் மற்றும் நடுவர்களின் மேலாளராக சரவணகுமார் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆக்கித் திருவிழா வரும் மே 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

குடோன் வசதி இல்லாததால் மழையில் நனைந்து 500 நெல் மூட்டைகள் நாசம் : விவசாயிகள் கவலை!
ஞாயிறு 10, மே 2026 9:38:57 AM (IST)

மினி வேனில் கடத்தப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!
ஞாயிறு 10, மே 2026 9:20:18 AM (IST)










