» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மினி வேனில் கடத்தப்பட்ட 1,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

ஞாயிறு 10, மே 2026 9:20:18 AM (IST)

கோவில்பட்டியில் மினி வேன் மூலம் கடத்த முயன்ற சுமார் 1,250 கிலோ ரேஷன் அரிசியைத் தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட எஸ்பி-யின் உத்தரவின் பேரில் தனிப்படை பிரிவு உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனைப் போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் 25 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1,250 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வேலாயுதபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த காமராஜ் (65) என்பவரைப் போலீசார் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி வேன் ஆகியவற்றை போலீசார் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory