» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மேம்பாலத்திலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி: போலீஸ் விசாரணை!

சனி 9, மே 2026 9:07:56 PM (IST)



தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள மேம்பாலத்திலிருந்து வாலிபர் ஒருவர் திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் செல்வ ராம். இவரது மகன் சச்சின் பாரத் (19). இவர் இன்று மாலை சுமார் 6 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேம்பாலம் வழியாகக் கிழக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது, சச்சின் பாரத் திடீரென தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, யாரும் எதிர்பாராத விதமாகப் பாலத்திலிருந்து கீழே குதித்தார். பல அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில், அவருக்கு முகம், நெஞ்சு மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், படுகாயமடைந்த வாலிபரை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன ஐயர், சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். 

19 வயதே ஆன வாலிபர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார்? குடும்பப் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் மன உளைச்சலா? என்பது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரபரப்பான மாலை வேளையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மேம்பாலத்திலிருந்து வாலிபர் குதித்த சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory