» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கட்டபொம்மன் விழாவை அரசு நடத்த கோரிக்கை!
புதன் 6, மே 2026 10:58:31 AM (IST)
பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் வீரசக்கதேவி விழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், கட்டபொம்மன் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எப்போதுமே அரசு விழாதான் பொதுமக்கள் விழாவாகக் கருதப்படுகிறது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக அரசுத் தரப்பில் கொண்டாடப்படும் விழாவே அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகும்.
இந்த ஆண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் விழாவை நடத்திவிட்டு, அடுத்த ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களை அழைத்து பிரம்மாண்டமாக விழா நடத்தலாம் என்பது எங்கள் அமைப்பின் கருத்தாகும்.
தென் மாவட்டங்களில் கட்டபொம்மன் பெயரில் பல அமைப்புகள் இருந்தாலும், அரசு விழாவை முன்னின்று நடத்தத் தவறுவது சமுதாயத்தின் மீதான பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. குறிப்பாக, 'கட்டபொம்மன் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை'க்கு இவ்விழாவை நடத்துவதில் முதல் முன்னுரிமை உள்ளது.
வேறு எந்த அமைப்பும் முன்வராத பட்சத்தில், 'கட்டபொம்மன் குளோபல் பவுண்டேஷன்' இவ்விழாவை முழு பொறுப்பேற்று நடத்தத் தயாராக உள்ளது. இதற்கான முழு செலவுகளையும் எங்கள் அமைப்பே ஏற்கும் என்று உறுதி கூறுகிறோம்.
மற்ற அமைப்புகள் முன்னின்று நடத்தினாலும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும், அவர்களைப் பாராட்டவும் நாங்கள் தயாராக உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் பாஞ்சாலங்குறிச்சியில் அரசு விழா தங்குதடையின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் ஒரே விருப்பம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லூரி மாணவியைக் கொலை செய்ய முயற்சி: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
புதன் 6, மே 2026 5:20:49 PM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!
புதன் 6, மே 2026 5:11:48 PM (IST)

த.வெ.க. பேனர் கிழிப்பு: அஜிதா ஆக்னலின் அண்ணன் கைது - தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 6, மே 2026 4:59:53 PM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவர் கைது
புதன் 6, மே 2026 4:05:03 PM (IST)

தூத்துக்குடியில் ம.தி.மு.க.வின் 33-வது ஆண்டு தொடக்க விழா - கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம்
புதன் 6, மே 2026 3:06:18 PM (IST)

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுவையான ஸ்நாக்ஸ்!
புதன் 6, மே 2026 12:21:48 PM (IST)










