» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் த.வெ.க. பேனர் கிழிப்பு: திமுக பிரமுகர் கைது

புதன் 6, மே 2026 4:59:53 PM (IST)

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வாழ்த்துப் பேனரைக் கிழித்த புகாரில், திமுக பிரமுகரும் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளருமான சுமன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஸ்ரீநாத் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் நிர்வாகிகள் தூத்துக்குடி நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வெற்றி வாழ்த்துத் தெரிவித்து டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.

தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் கோவில் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து த.வெ.க. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பேனரைச் சேதப்படுத்தியது மட்டக்கடை தட்டார் தெருவைச் சேர்ந்த சுமன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சுமன், திமுகவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது.

இவர் திமுக பிரமுகர் பில்லா ஜெகனின் தம்பி ஆவார். மேலும், த.வெ.க. முன்னாள் நிர்வாகியும், தற்போதைய மாநகராட்சி மண்டலத் தலைவருமான அஜிதா ஆக்னலின் அண்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 3 நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory