» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்கம்பத்தில் கார் மோதி விபத்து: 2 பெண்கள் படுகாயம்!
புதன் 6, மே 2026 8:44:26 AM (IST)

குலசேகரன்பட்டினம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதிய விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த குருஸ் (41) என்பவர், தனது காரில் அதே ஊரைச் சேர்ந்த கலைஈஸ்வரி, அபிநயா உட்பட 6 பேரை ஏற்றிக்கொண்டு குலசை கோவிலுக்குச் சென்றுள்ளார். கார் கல்லாமொழி பழைய பாசி கம்பெனி அருகே சென்றபோது, திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பலமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கலைஈஸ்வரி மற்றும் அபிநயா ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். காரில் இருந்த மற்ற நால்வர் காயமின்றி தப்பினர். காரின் மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து விழுந்ததுடன், மின்சாரக் கம்பிகள் சாலையின் குறுக்கே அறுந்து விழுந்தன. மின் கம்பிகள் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார வாரிய ஊழியர்கள், சாலையில் கிடந்த மின் கம்பிகளை உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர். இந்த விபத்து குறித்துக் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லூரி மாணவியைக் கொலை செய்ய முயற்சி: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
புதன் 6, மே 2026 5:20:49 PM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!
புதன் 6, மே 2026 5:11:48 PM (IST)

த.வெ.க. பேனர் கிழிப்பு: அஜிதா ஆக்னலின் அண்ணன் கைது - தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 6, மே 2026 4:59:53 PM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மீனவர் கைது
புதன் 6, மே 2026 4:05:03 PM (IST)

தூத்துக்குடியில் ம.தி.மு.க.வின் 33-வது ஆண்டு தொடக்க விழா - கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டம்
புதன் 6, மே 2026 3:06:18 PM (IST)

குழந்தைகளுக்கான ஆரோக்கியமான சுவையான ஸ்நாக்ஸ்!
புதன் 6, மே 2026 12:21:48 PM (IST)










