» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு மாயம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:20:39 PM (IST)
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகு திடீரென காணாமல் போனது குறித்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் சங்குளி காலனியைச் சேர்ந்தவர் பரமசிவன் (68). கடல் தொழில் செய்து வரும் இவர், தனக்குச் சொந்தமான பைபர் படகை வழக்கம்போல் திரேஸ்புரம் கடற்கரையில் முட்டு அளவு தண்ணீரில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று மாலை 5:30 மணி அளவில் படகு கடற்கரையில் பாதுகாப்பாக இருந்துள்ளது.
ஆனால், இன்று காலை 7:30 மணி அளவில் பரமசிவன் கடற்கரைக்குச் சென்று பார்த்தபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் படகு கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, படகு காற்றின் வேகத்தில் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது படகைத் திருடிச் சென்றனரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு காணாமல் போன சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெல்டிங் கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

வெயிலின் உக்கிரத்தில் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 25, ஏப்ரல் 2026 10:11:07 AM (IST)

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 9:02:30 AM (IST)

தூத்துக்குடி தென்பாகம் ஆய்வாளர் மாற்றம்: எஸ்.பி. மதன் உத்தரவு!
சனி 25, ஏப்ரல் 2026 8:53:42 AM (IST)








வேடிக்கை பார்ப்பவன்Apr 19, 2026 - 01:55:51 PM | Posted IP 162.1*****