» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற காவலர்களுக்கு அவகாசம் அளித்த உயர்நீதிமன்றம்!
சனி 25, ஏப்ரல் 2026 8:49:44 AM (IST)
உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 9 காவலர்களும், அந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் காவலர்களால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டதில், இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தது.சுமார் 6 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் அதிரடித் தீர்ப்பளித்தார். இதில் முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி சி.பி.ஐ தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 காவலர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதிகள் "சி.பி.ஐ உங்களது தண்டனையை உறுதி செய்ய மனு அளித்துள்ளது. ஆனால், தண்டனை விதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் நீங்கள் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை. இதற்காக நீதிமன்றம் உங்களுக்கு உரிய கால அவகாசத்தை வழங்குகிறது. தண்டனையை எதிர்த்து நீங்கள் மேல்முறையீடு செய்யுங்கள்" என்றுதெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், தங்களுக்குத் தீர்ப்பு தொடர்பான முழுமையான ஆவணங்கள் கிடைக்கவில்லை எனக் கூறினார். அதற்கு நீதிபதிகள், "மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகலை வைத்து மேல்முறையீடு செய்யலாம்" என அறிவுறுத்தி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

வெயிலின் உக்கிரத்தில் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 25, ஏப்ரல் 2026 10:11:07 AM (IST)







