» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெயிலின் உக்கிரத்தில் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 25, ஏப்ரல் 2026 10:11:07 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள காமராஜர் நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளில், கடும் கோடை வெயிலின் உக்கிரத்தில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் CWSS கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆற்று தண்ணீர் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால் பைப் லைன் வழித்தடங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டதால், அந்த பகுதிகளுக்கு செல்லும் பைப் லைன்கள் சேதமடைந்து கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சாயர்புரம் – தேரி சாலை பகுதியில் அடிக்கடி பைப் உடைப்பு ஏற்பட்டதால், சாயர்புரத்திலிருந்து காமராஜர் நகர் வழியாக செல்லும் பைப் லைன் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அந்த பகுதியில் தேரி சாலை விரிவாக்கம் பணிகளும் நடைபெற்றன. அந்த பணிகளின் போது காமராஜர் நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளுக்கு செல்லும் பைப் லைன் சுமார் 600 மீட்டர் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பழுதடைந்த பைப் லைன்களை இதுவரை மாற்றாததால், காமராஜர் நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக குடிநீர் விநியோகம் நடைபெறாமல் உள்ளது. இதனால் கோடை காலத்தின் கடும் வெயிலில் பொதுமக்கள் குடிப்பதற்கே தண்ணீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் சாயர்புரம் தேரி சாலை பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பணிகள் முடிந்தும், தேரி மேல் நிலைத் தேக்கத் தொட்டியிலிருந்து காமராஜர் நகர் மற்றும் சக்கம்மாள்புரம் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் பைப் லைன் பணிகள் இன்னும் நடைபெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா, பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, பழுதடைந்த பைப் லைன்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போர்கால அடிப்படையில் உடனடியாக மாற்றி குடிநீர் விநியோகத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 9:02:30 AM (IST)







