» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெல்டிங் கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்த நபர், தனது கடையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெர்மல் நகர், கோவில்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பூங்காவனம் (51). இவர் அந்தப் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார். தொழில் நிமித்தமாக சென்னைக்குச் சென்றிருந்த பூங்காவனம், கடந்த 24-ம் தேதி காலை ஊர் திரும்பியுள்ளார். அன்று மாலை சுமார் 6:45 மணியளவில், பூங்காவனத்தின் நண்பர் கெவின் என்பவர், பூங்காவனத்தின் மகன் சிலம்பரசனைத் தொடர்பு கொண்டு உடனடியாகக் கடைக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து கடைக்கு விரைந்து சென்ற சிலம்பரசன், அங்கு தனது தந்தை கடையின் முன்புறம் இருந்த இரும்பு குழாயில் கயிற்றால் தூக்கிட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உறவினர்கள் உதவியுடன் பூங்காவனத்தை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பூங்காவனம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பூங்காவனம் ஏதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இது குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபா ஜென்ஸி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory