» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தென்பாகம் ஆய்வாளர் மாற்றம்: எஸ்.பி. மதன் உத்தரவு!

சனி 25, ஏப்ரல் 2026 8:53:42 AM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் தினமான விடுமுறை நாளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கத் தவறியதாகத் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கடந்த 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், தென்பாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் புகார்கள் எழுந்தன.

அரசால் தடை செய்யப்பட்ட தேர்தல் தினங்களில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கத் தவறியதாகத் தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதனுக்கு ரகசியத் தகவல்கள் மற்றும் புகார்கள் சென்றன. இது குறித்து முதற்கட்ட விசாரணை நடத்திய எஸ்.பி. மதன், ஆய்வாளர் திருமுருகனை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தேர்தல் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த சூழலில், காவல் ஆய்வாளர் ஒருவர் பணியில் மெத்தனமாக இருந்ததாகக் கூறி மாற்றப்பட்ட சம்பவம் தூத்துக்குடி காவல்துறையினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

ராஜாSep 13, 1777 - 06:30:00 PM | Posted IP 172.7*****

Good Action

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory