» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் ராெக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் - 2026 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கண்காணிப்புப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று (15.04.2026) வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் மற்றும் பொருட்களின் விவரங்களை தெரிவித்துள்ளார்.
பறிமுதல் விபரங்கள்:
- உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட மொத்த ரொக்கத்தொகை ரூ. 83,93,266/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்களின் மொத்த மதிப்பு ரூ. 5,52,119/- ஆகும்.
தேர்தல் விதிமுறைகளை மீறி ஆவணங்களின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெக-விலிருந்து விலகி 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் : சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:46:09 PM (IST)

தனியார் பேருந்தில் 2பேரிடம் ரூ.37லட்சம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டுவரப்பட்டதா?
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:16:45 PM (IST)

துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை : தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:01:10 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடியில் வெடிபொருள் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)

தூத்துக்குடி அண்ணா நகரில் கால்வாய் அடைப்பு: வீடுகளுக்குள் புகும் கழிவுநீர் - பொதுமக்கள் அவதி
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:19:28 AM (IST)





