» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பத் தகராறு: ஸ்வீட் மாஸ்டர் விஷம் குடித்துத் தற்கொலை!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:58:40 AM (IST)

பசுவந்தனை அருகே குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த ஸ்வீட் மாஸ்டர், மதுவில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் எல்லைக்குட்பட்ட அச்சங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் (46). இவருக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி முருகலட்சுமி (36). இவர்களுக்கு சுடலைவடிவு (15), உமா மகேஸ்வரி (11) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வள்ளிநாயகம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஸ்வீட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

வள்ளிநாயகத்திற்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் குடிபோதையில் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் முருகலட்சுமி தனது மகள்களுடன் தந்தை வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார்.

நேற்று  சத்தியமங்கலத்தில் இருந்து ஊருக்குத் திரும்பிய வள்ளிநாயகம், குடிபோதையில் மாமனார் வீட்டிற்குச் சென்று தனது மனைவி மற்றும் மகள்களை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர்கள் வர மறுத்ததால் மிகுந்த மனவேதனை அடைந்த வள்ளிநாயகம், இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் தனியாக இருந்தபோது, மதுவில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இன்று காலை 8 மணி அளவில் அவரது தாயார் சங்கரம்மாள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வள்ளிநாயகம் வீட்டின் முற்றத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்துத் தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.

தற்போது அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துப் பசுவந்தனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory