» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)
தூத்துக்குயில் கடன் பிரச்சினை காரணமாக வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் பாலமுருகன் (36). இவருக்கு பாலமுருகனுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான கடன் பிரச்சினை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாடியில் உள்ள அறையில் சீலிங் ஃபேனில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்த அவரது மனைவி, பாலமுருகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டு, ஆட்டோ மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பாலமுருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பணம் பறிமுதல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:09:37 PM (IST)

தவெக-விலிருந்து விலகி 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் : சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:46:09 PM (IST)

தனியார் பேருந்தில் 2பேரிடம் ரூ.37லட்சம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டுவரப்பட்டதா?
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:16:45 PM (IST)

துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை : தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:01:10 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடியில் வெடிபொருள் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)





