» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அண்ணா நகரில் கால்வாய் அடைப்பு: வீடுகளுக்குள் புகும் கழிவுநீர் - பொதுமக்கள் அவதி
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:19:28 AM (IST)

தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது குறுக்குத் தெருவில் நடைபெற்று வரும் தனியார் கட்டிடப் பணியால், கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் 6-வது குறுக்குத் தெருவில் கடந்த 15 மாதங்களாகப் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுமானப் பணியின் போது, கழிவுநீர் வெளியேறும் பிரதான கால்வாயை மறித்து கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டும், தற்காலிகமாக கால்வாய் அடைக்கப்பட்டும் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதால், அண்ணா நகர் 5-வது தெருவில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கழிவறை குழாய்கள் வழியாகக் கழிவுநீர் பின்னோக்கிப் பாய்ந்து வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கழிவுநீருடன் சேர்ந்து தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களும் வீடுகளுக்குள் புகுவதால் பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து கட்டிட உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பலமுறை முறையிட்டும் எவ்விதப் பலனும் இல்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், கழிவுநீர் தேக்கத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கால்வாய் அடைப்பை நீக்கி கழிவுநீர் சீராகச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பணம் பறிமுதல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:09:37 PM (IST)

தவெக-விலிருந்து விலகி 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் : சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:46:09 PM (IST)

தனியார் பேருந்தில் 2பேரிடம் ரூ.37லட்சம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டுவரப்பட்டதா?
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:16:45 PM (IST)

துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை : தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:01:10 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடியில் வெடிபொருள் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)






தெரு வாசிApr 17, 2026 - 12:30:57 PM | Posted IP 172.7*****