» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் பேருந்தில் 2பேரிடம் ரூ.37லட்சம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டுவரப்பட்டதா?
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:16:45 PM (IST)

விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து ரூ.37 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெருநாழி விலக்கில் தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் சேகர் தலைமையில் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்த தனியார் பேருந்தினை சோதனை செய்தனர்.
அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய அருப்புக்கோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை சோதனை செய்த போது அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் 35 லட்சத்து 22,000 பணம் இருப்பது தெரிய வந்தது. அதேபோன்று மற்றொரு பயணி விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரெண்டு லட்சத்து 21 ஆயிரத்து 51 ரூபாய் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இருவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் இல்லாமல் பல லட்ச ரூபாய் பணம் என்பதால் அந்தப் பணத்தை தூத்துக்குடி வருமான வரித்துறை உதவி இயக்குனர் பாலமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணம் அவர்களுக்கு எப்படி வந்தது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்தில் இரண்டு பயணிகளிடம் 37 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பணம் பறிமுதல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:09:37 PM (IST)

தவெக-விலிருந்து விலகி 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் : சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:46:09 PM (IST)

துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை : தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:01:10 PM (IST)

சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடியில் வெடிபொருள் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)





