» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடியில் வெடிபொருள் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி வைக்க மாவட்டத் தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்றும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பொது அமைதியைப் பேணும் வகையில் 1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அனைத்துக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி வைக்கத் தமிழக அரசு (அரசாணை எண்: G.O (D) No. 454, உள்துறை, நாள்: 18.03.2026) ஆணையிட்டுள்ளது.
மேற்கண்ட அரசாணையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகள் வாக்குப்பதிவை முன்னிட்டு 21.04.2026 முதல் 24.04.2026 வரை, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு: 02.05.2026 முதல் 04.05.2026 வரை ஆகிய நாட்களில் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும்:
இந்தத் தடையை மீறிச் செயல்படும் வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பணம் பறிமுதல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:09:37 PM (IST)

தவெக-விலிருந்து விலகி 200 பேர் அதிமுகவில் ஐக்கியம் : சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் இணைந்தனர்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:46:09 PM (IST)

தனியார் பேருந்தில் 2பேரிடம் ரூ.37லட்சம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டுவரப்பட்டதா?
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:16:45 PM (IST)

துாத்துக்குடி மாநகராட்சியில் நீடிக்கும் அவல நிலை : தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:01:10 PM (IST)

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)





