» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு

புதன் 15, ஏப்ரல் 2026 11:49:49 AM (IST)

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், கீழ ஈரல் பகுதியில் உள்ள டான் போஸ்கோ கல்லூரி அருகே இன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கனரக வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த எட்டயபுரம் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றி அரசு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் இதுவரை தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற வாகனம் மற்றும் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




Thoothukudi Business Directory