» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் போக்ஸோ சட்டத்தில் கைது!
புதன் 15, ஏப்ரல் 2026 8:48:12 AM (IST)
கோவில்பட்டியில் 14 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட முதியவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் உள்ள அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (61). இவர் 14 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முதியவர் கணபதி சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி: அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:03:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST)

மனைவி, குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:11:51 PM (IST)

குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 15, ஏப்ரல் 2026 12:44:33 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
புதன் 15, ஏப்ரல் 2026 11:49:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல் : 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
புதன் 15, ஏப்ரல் 2026 10:41:22 AM (IST)






