» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குத்துவிளக்கு ஏற்றியபோது சேலையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்
புதன் 15, ஏப்ரல் 2026 12:44:33 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றிச் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகச் சேலையில் தீப்பிடித்துக் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மட்டக்கடை, கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி பிரேமா (58). இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரேமா தனது வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைத்துச் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையில் விளக்கில் எரிந்துகொண்டிருந்த தீப் பிடித்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் தீ உடல் முழுவதும் பரவியதில் அவர் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பிரேமாவை மீட்டு உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடந்த 8-ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப் பதிவு செய்துள்ளார். விபத்து நடந்த விதம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி: அரசு ஊழியர்கள் தபால் வாக்குப்பதிவு!
புதன் 15, ஏப்ரல் 2026 4:03:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:32:23 PM (IST)

மனைவி, குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 15, ஏப்ரல் 2026 3:11:51 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
புதன் 15, ஏப்ரல் 2026 11:49:49 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல் : 272 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்!
புதன் 15, ஏப்ரல் 2026 10:41:22 AM (IST)

கச்சிகுடா - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்: ஜூன் 15 முதல் அமல்!
புதன் 15, ஏப்ரல் 2026 9:07:28 AM (IST)






