» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிக்கு திமுகவே காரணம்: கனிமொழி எம்பி பிரச்சாரம்!

செவ்வாய் 14, ஏப்ரல் 2026 5:13:07 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு திமுக அரசு பல்வேறு திட்டஙகளை நிறைவேற்றியுள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி எம்பி குறிப்பிட்டார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசு மற்றும் அதிமுக மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள்: தமிழ்நாட்டின் வரிப் பணத்தை எடுத்துச் செல்லும் மத்திய அரசு, திருப்பித் தரும்போது நிதியைக் குறைத்தே வழங்குகிறது. "இந்தி படித்தால்தான் நிதி" என ரூ.3,200 கோடியை மத்திய அரசு பிடித்து வைத்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்குத் தமிழகத்திற்கு அனுமதி மறுக்கும் மத்திய அரசு, வட மாநிலங்களில் குறைந்த மக்கள் தொகை கொண்ட இடங்களுக்கும் அத்திட்டத்தை வழங்குகிறது. 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியைக் குறைத்து, அத்திட்டத்தையே முடக்கும் வேலையை மோடி அரசு செய்கிறது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தூத்துக்குடியில் மட்டும் 3,24,474 பெண்கள் பயன் பெறுகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தில்  17,108 மாணவிகள் பலன் பெறுகின்றனர். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில்  மாவட்டத்தில் 6,80,000 பயனாளிகள். 60,000 பேருக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது; கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2,217 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 800 கி.மீ. சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் ரூ.10 கோடியில் மகப்பேறு மருத்துவப் பிரிவு, ஹாக்கி மைதானம் மற்றும் விடுதி பணிகள், கி.ரா மற்றும் வீரமாமுனிவர் மணிமண்டபங்கள். தொகுதிக்கு மட்டும் எம்.பி. நிதியிலிருந்து ரூ.7.12 கோடி ஒதுக்கீடு. பனைப் பொருட்கள் குழுமம்  ரூ.430 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம், அரசு கலைக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக் கட்டிடங்கள். தொகுதிக்கு எம்.பி. நிதியிலிருந்து ரூ.4 கோடி ஒதுக்கீடு.

பெண்களுக்குப் பாதுகாப்பு - மாநில ஒப்பீடு

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகம் எனப் புள்ளிவிவரங்களை வெளியிட்டார்: உத்தரப் பிரதேசம்: 66,381 குற்றங்கள், மகாராஷ்டிரா: 47,101 குற்றங்கள், ராஜஸ்தான்: 45,450 குற்றங்கள், தமிழ்நாடு: 8,943 குற்றங்கள் (பதிவு செய்யப்பட்டவை). தமிழகத்தில் குற்றங்கள் மீது 99% குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். நீட் தேர்வு, மின்கட்டண உயர்வுக்கான உதய் மின் திட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் என அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டவர் அவர். 2016-ல் அதிமுக அறிவித்த 'இலவச செல்போன்' திட்டம் என்னவானது?" என்று அவர் கேள்வி எழுப்பினார். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே இயக்கம் திமுகதான் எனக்கூறி, உதயசூரியன் சின்னத்திற்கு அவர் வாக்கு சேகரித்தார்.


மக்கள் கருத்து

ரயில் கேட்டால் பாதிக்க பட்ட தூத்துக்குடி மக்கள் சார்பாகApr 15, 2026 - 01:29:52 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி ஒன்றாம் இரண்டாம் ரயில்வே கேட் போக்குவரத்து நெரிசலால் மக்கள் தினமும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நீங்கள் வந்ததில் இருந்து ஒரு நாலாவது அந்த வழியில் வந்தீர்களா ஆதலால் தூத்துக்குடி ரயில்வே கேட் பிரச்சினைய எந்த வேட்பாளர் தீர்ப்பேன் என்று கோரிக்கை வைக்கிறார்களோ அவர்களுக்கே தூத்துக்குடி மக்கள் வாக்கு அளிப்பார்கள்.

என்னதுApr 15, 2026 - 12:21:20 PM | Posted IP 104.2*****

நம்ம ஊர் மக்கள் உழைப்பின் தான் வளர்ச்சி ... ஆமா பெரிய இளிச்சவாய்

அப்படி என்றால் மற்ற மாவட்டம் வளர்ச்சி அடையவே இல்லApr 15, 2026 - 03:02:07 AM | Posted IP 172.7*****

அப்படி என்றால் மற்ற மாவட்டம் வளர்ச்சி அடையவே இல்லையா

inbaApr 14, 2026 - 09:32:20 PM | Posted IP 172.7*****

இலவசங்கள் கொடுப்பது எப்படி வளர்ச்சியாகும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory