» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு

செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)



தூத்துக்குடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பைத் தீயணைப்பு வீரர்கள் லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை நடுக்கூட்டுடன் காடு, மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இன்று இவரது வீட்டின் முன்புறம் திடீரென ஒரு பாம்பு புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக இதுகுறித்து சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில், சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வேல்முருகன் வீட்டின் முன்புறம் இருந்த செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சுமார் 4 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பை வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.

பின்னர் மீட்கப்பட்ட அந்தப் பாம்பு, ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது. குடியிருப்புப் பகுதிக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory