» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்பிக் - கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில் 55-வது தேசிய பாதுகாப்பு வார விழா!
செவ்வாய் 17, மார்ச் 2026 12:33:07 PM (IST)

தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் உர தொழிற்சாலையில், 55-வது தேசிய பாதுகாப்பு வார விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், தேசிய பாதுகாப்பு வார விழாவினை கொடியேற்றித் தொடங்கி வைத்தார். அவரது தலைமையில் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து 'பாதுகாப்பு உறுதிமொழி' எடுத்துக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்பிக் நகர் SMAC IAC அரங்கில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு சாதனங்கள் குறித்த பொருட்காட்சியையும் கூடுதல் இயக்குநர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். தேசிய பாதுகாப்பு வார விழாவின் நிறைவு விழாவில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பாதுகாப்பு வார விழாவையொட்டி தொழிலாளர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவி கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி செல்போன் கடைகள் அடைப்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:17:38 PM (IST)

வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீள பச்சைப் பாம்பு மீட்பு
செவ்வாய் 17, மார்ச் 2026 9:15:28 PM (IST)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை : ஆட்சியர் இளம்பகவத் நேரில் ஆய்வு
செவ்வாய் 17, மார்ச் 2026 3:40:32 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1.54 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
செவ்வாய் 17, மார்ச் 2026 3:23:13 PM (IST)

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வேட்பாளர் நேர்காணல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:17:19 PM (IST)








