» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

செவ்வாய் 17, மார்ச் 2026 3:46:41 PM (IST)



தூத்துக்குடியில் சட்டமன்றத் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026, வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான சிறப்புப் பிரச்சார வாகனத்தை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் இன்று (17.03.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

100% தவறாமல் வாக்களிப்போம் வாரீர்" என்ற வாசகத்துடன் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வாக்குக்கு பணம் இல்லை போன்ற வாசகங்கள் மூலம் நேர்மையான தேர்தலை வலியுறுத்துகிறது. தேர்தல் விதிமீறல்களைப் புகாரளிக்க cVIGIL செயலி மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் 1950 என்ற உதவி எண் குறித்த விவரங்கள் வாகனத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று, வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வின் போது அரசு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory