» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விடியா ஆட்சியை மக்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள்: கடம்பூர் செ. ராஜு கடும் தாக்கு!

செவ்வாய் 17, மார்ச் 2026 12:22:02 PM (IST)



திமுக ஆட்சியின் முடிவுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலமாக அமையும் என தூத்துக்குடி ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பேசினார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஒரு அமைச்சர் 425 நாட்கள் சிறையில் இருந்தது இந்த ஆட்சிக்கு நேர்ந்த கேவலம். காவல்துறைக்குத் தலைமை தாங்கும் முதலமைச்சர் ஒரு 'பொம்மை முதலமைச்சராக' செயல்படுகிறார்.

தூத்துக்குடி பாலியல் சம்பவத்தில் குளத்தூர் போலீசார் முறையாகச் செயல்படவில்லை. மணிப்பூர் விவகாரத்தில் பேசிய எம்.பி., சொந்தத் தொகுதியில் நடந்த இச்சம்பவத்திற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை?பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத இந்த விடியா ஆட்சியை மக்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள். இந்த ஆட்சியின் முடிவுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலமாக அமையும் என அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory